காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 300 கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலின் தெற்கு நகரமான ஒபாகிமில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு நடந்த சண்டையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்கள் அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.