யுக்ரைனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
யுக்ரைன் படைகள் போர் புரிந்துவரும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் தவிர, அனைத்து பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு நகரங்களை தனி நாடுகளாக ரஷ்யா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து, ரஷ்யப் படைகள் யுக்ரைனுக்குள் நுழையும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது யுக்ரைன் எல்லையையொட்டி ரஷ்ய போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன.
இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் யுக்ரைன், நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
இந்த பிரகடனம் 30 நாட்கள் அமுலில் இருக்கும் என யுக்ரைன் பாதுகாப்புத் தரப்பு கூறியுள்ளது.