July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரித்தானியா!

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டிற்குள் பயணிப்பவர்களுக்கு புதிய விதிகளை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதிகளின் படி பிரித்தானியாவுக்கு செல்பவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு முன்பு கொவிட் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.

மேலும், பிரித்தானியா வந்ததன் பின்னர் 2 நாட்களுக்குள் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கிலாந்துக்கு வந்த 10 நாட்களுக்குள் வீட்டு தனிமையில் வைக்கப்பட வேண்டும் எனவும் புதிய விதிகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் உள்ள 11 ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் பிரிட்டன் அல்லது ஐரிஷ் பிரஜைகள் நிபந்தனைகளுடன் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதன்படி அவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என புதிய விதிகள் தெரிவிக்கின்றன.