
தென்கிழக்கு லண்டனில் பெக்ஸ்லிஹீத், ஹாமில்டன் சாலையில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் முதல் மாடியில் வியாழன் அன்று குறித்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த வீட்டில் சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே அவர்கள் வசித்தாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் தீயணைப்பு படை விரைவாக செயற்பட்டு தீ விபத்தில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கலாக ஐவரை மீட்ட போதிலும் அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டப்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவனும் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக அயலவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.