எதியோபியாவின் அமைதியின்மை பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
கென்யாவுக்கு விஜயம் செய்துள்ள அன்டனி பிலிங்கன், அந்நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்துள்ளார்.
எதியோபியாவில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் போர்ச் சூழல், அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதியோபிய அரசாங்கம் மற்றும் டைக்ரே கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான போர் நிறுத்த முயற்சிகளில் கென்யாவின் பங்களிப்பை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
எதியோபிய அமைதியின்மைக்கு பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்வு காண்பதை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.