வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளில் வரலாறு காணாத வகையில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
1905 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச பனிப்பொழிவு இது என உள்நாட்டு செய்தி சேவைகள் தெரிவித்துள்ளன.
கடுமையான பனிப்புயல்கள் 51 செ.மீ வரை உயரமான பனிப்பொழிவை ஏற்படுத்தியதையடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக தலைநகர் ஷென்யாங்கில், லியோனிங் மாகாணத்தில், சராசரி பனிப்பொழிவு இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை சூடாக வைத்திருப்பதற்காக அதிகமான சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்டை நாடான மங்கோலியாவில், கடுமையான பனிப்புயல் காரணமாக ஒருவர் இறந்தார் மற்றும் 5,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பனிப்புயல் மிகவும் சீரற்ற மற்றும் திடீர் தீவிர வானிலை நிகழ்வு என மங்கோலிய நகரமான டோங்லியாவோவில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா முழுவதும் மொத்தமாக 27 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
இது அங்கு பனிப்புயல்களுக்காக வெளியிடப்பட்ட மிக உயர்ந்த எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.