photo: Twitter/ ForeignOfficePk
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க பாகிஸ்தான் தலைமையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட இராஜதந்திரிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் அங்குள்ள பொதுமக்கள் அயல் நாடுகளுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சரிவில் உள்ளதாகவும் சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தான் முன்னணி வகிப்பதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது.