May 26, 2025 4:18:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சியரா லியோனில் எரிபொருள் கிடங்கில் வெடிப்பு: பலர் பலி!

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சியரா லியோனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் கிடங்கொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எரிபொருள் களஞ்சியத்தில் இருந்து எரிபொருள் கொட்டியதைத் தொடர்ந்து அங்கு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் கிடங்கைச் சுற்றியுள்ள தெருக்களில் ஏற்றபட்ட தீபரவலில் சிக்கி தீக்கிரையான உடல்களின் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.

“துயரகரமான தீவிபத்து மற்றும் உயிர் இழப்புகளால் மிகவும் கவலையடைந்தேன்” என அந்நாட்டு ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.