இலங்கையின் கொரோனா தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள 2.5 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக இலங்கைக்கு இந்த மேலதிக நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பான கொவிட்-19 தடுப்பூசி வழங்கலுக்கான சம அணுகலைத் துரிதப்படுத்துதல் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் என்பன இந்த நிதியுதவியின் நோக்கமாகும்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமெரிக்கா இலங்கைக்கு 17.9 மில்லியன் டொலர்களை பங்களிப்பாக வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் போது இலங்கையர்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், கொரோனாவின் எதிர்மறையான பொருளாதாரத் தாக்கங்களைத் தணிப்பதற்காகவும் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.