January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் கந்தகாரில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்: பலர் பலி!

Photo: Twitter

ஆப்கானிஸ்தான் கந்தகாரில் பள்ளிவாசலொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் 32 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்காக குறித்த பள்ளிவாசலில் ஏராளமானோர் கூடியிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதேவேளை கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.