நோர்வேயில் நபரொருவர் வில் அம்புகள் மூலம் மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிக்கு வில் அம்புகளுடன் வந்த நபர், மக்கள் மீது அம்புகளை எய்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார், மக்கள் மீது தாக்குதல் நடத்திய 37 வயதுடைய நபரை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
அந்த நபர் தனியாக செயற்பட்டுள்ளதாகவே பொலிஸார் கூறுகின்றனர். எனினும் இது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதா? என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.