ஆப்கானிஸ்தரின் நெருக்கடி நிலைமையைத் தவிர்க்கும் முகமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜி20 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஜி20 நாடுகளின் அவசர மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பேரழிவுகளைத் தவிர்க்கும் நோக்கில் இவ்வாறானதொரு இணக்கத்திற்கு வந்ததாக இத்தாலி பிரதமர் மாரியோ டிராகி தெரிவித்துள்ளார்.
தாலிபான்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியேற்பட்டாலும், ஆப்கானிஸ்தானுக்கு உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களை பொறுப்பேற்கும் நாடுகளுக்கு உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.2 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.
ஜி20 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, அவர்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்துள்ளனர்.