மிக நீண்ட மூக்குடன் வாழும் நபராக துருக்கியைச் சேர்ந்த மெஹ்மெட் ஆஸிரெக், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
71 வயதான மெஹ்மெட் ஆஸிரெக், தனது மூக்கை அளவிடுவதற்காக ரோமில் உள்ள லோ ஷோ டீ ரெக்கார்ட் என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு மெஹ்மெட் ஆஸிரெக்கின் மூக்கை அளிவிட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் அவரின் மூக்கு 8.8 சென்டிமீட்டர் என கணித்துள்ளனர்.
மிக நீளமான மூக்குடன் வாழும் நபராக 2010 இல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம்பெற்றார். அதன் பின்னர் தற்போது மீண்டும் தனது மூக்கை அளவிட்டு அந்தச் சாதனையை புதிப்பித்துள்ளார்.
எனினும் இதனை விடவும் நீண்ட மூக்கை கொண்டவர்கள் உலகில் இருக்கமுடியும் எனவும் அவர்கள் கின்னஸ் உலக சாதனைக்குத் தங்களை அறியப்படுத்தாமல் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு முன்னர் நீண்ட மூக்கை உடைய நபராக சர்க்கஸ் நட்சத்திரம் தாமஸ் வெடர்ஸ் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளார்.
1770 காலப்பகுதில் வாழ்ந்த தாமஸ் வெடர்ஸின் 19 சென்டிமீட்டர் அளவுள்ள மூக்கை கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.