சீனாவின் வடக்கே உள்ள ஷான்ஸி மாநிலத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
ஷான்ஸி மாநிலத்தின் 70 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் தோல்வியடைந்துள்ளன.
வெள்ளத்தால் 17 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
வெள்ளப் பெருக்கால் நான்கு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதோடு, ஏனைய உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
3 மாதங்களுக்கு முன்னர் ஹெனான் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 300 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.