
“தாய்வான் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணியாது, அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாக்கும்” என ஜனாதிபதி சாய் இங் – வென் தாய்வானின் தேசிய தினத்தன்று ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
சீனாவின் செயல்பாடுகளை எதிர்கொள்ளத் தாம் தயாராக உள்ளதாகவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “மீண்டும் இரு நாடுகளும் ஒன்றிணைவதை நிறைவேற்றுவேன்” என்று உறுதியளித்துள்ள நிலையில், ஜனாதிபதி சாய் இங் – வென் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சாயின் உரை மோதலைத் தூண்டுவதாக சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.
தாய்வான் தன்னை இறையாண்மையுடைய அரசாக கருதுகின்ற போதிலும், சீனா அதனை தன்னிலிருந்து பிரிந்துபோன மாநிலமாகவே கருதுகின்றது.
சீனாவின் அணு ஆயுத திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்கள் உட்பட பல போர் விமானங்கள் தமது வான் பரப்புக்குள் வந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு அண்மையில் தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்கின்றது.