உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க தொற்று நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நவம்பர் மாதம் முதல் சர்வதேச பயணிகளுக்காக நாட்டைத் திறப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், சீனா உட்பட 33 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வருவோர் உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த தடுப்பூசி ஒன்றைச் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தம்மிடம் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான பயணத்திற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுத்துக்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளது.