July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசாங்க பிரதானிகள் நாடு கடந்த அரசாங்கத்தை அறிவித்துள்ளனர்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசாங்கத்தில் இருந்த பிரதானிகள் நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சட்டபூர்வமான அரசாங்கத்தின் பிரதானிகள் நாட்டை விட்டு வெளியேறினர்.

முன்னாள் அரசாங்கத்தில் இருந்து, நாட்டை விட்டு வெளியேறியவர்கள் முன்னாள் உப ஜனாதிபதி அமருல்லா சலேயின் தலைமையில் புதிய நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் மக்கள் ஆணையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை எந்தவொரு தரப்பினாலும் ஆட்சிக் கவிழ்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் தூதரகங்கள் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் நாடு கடந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினாலும், அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

தாலிபான்களைத் தோற்கடித்து, மக்கள் ஆணை வழங்கிய ஆட்சியை ஆப்கானில் ஸ்தாபிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக நாடு கடந்த அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.