பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் 10 பில்லியன் மர நடுகை திட்டத்தை பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராட்டியுள்ளார்.
ஐநா பொதுச் சபையில் உரையாற்றும் போதே பிரிட்டன் பிரதமர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இம்ரான் கானின் செயற்பாடுகளையும் பிரிட்டன் வரவேற்றுள்ளது.
பாகிஸ்தானின் 10 பில்லியன் மர நடுகை திட்டத்தை உலக நாடுகள் முன்மாதிரியாக எடுத்து, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக வெப்பநிலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
2030 ஆம் ஆண்டாகும் போது உலகில் கார்பன் பயன்பாடு குறைய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை சீனா படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.