January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா பொதுச் சபையில் ஆப்கானை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகும் தாலிபான்கள்

ஐநா பொதுச் சபையில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த தாலிபான்கள் தயாராகியுள்ளனர்.

ஐநாவுக்கான பிரதிநிதியாக சுஹைல் ஷஹீனை தாலிபான்கள் பெயரிட்டுள்ளனர்.

ஐநா பொதுச் சபையில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்தவப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளரிடம் தாலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐநாவுக்கான ஆப்கான் பிரதிநிதியாக ஆட்சி கவிழ்க்கப்பட்ட அரசாங்கத்தின் தூதுவர் கிராம் இசாக்ஸாய் இருந்து வருகிறார்.

தாம் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததுடன் ஐநாவுக்கு தூதுவராக இருந்த கிராம் இசாக்ஸாயின் பதவிக் காலம் நிறைவடைவதாகவும், புதிய தூதுவராக சுஹைல் ஷஹீன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தாலிபான்கள் ஐநா செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.

இம்முறை ஐநா பொதுச் சபை கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவது யார் என்பதை ஐநா பொதுச் செயலாளர் தீர்மானிக்கவுள்ளார்.