January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது ட்ரோன் தாக்குதலில் 10 ஆப்கான் பொதுமக்கள் உயிரிழந்ததை ஏற்றுக்கொண்டது அமெரிக்கா

அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்ததை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காபூலில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 29 ஆம் திகதி அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பான தகவல்களை அமெரிக்க மத்திய புலனாய்வுக் கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.