சுவீடன் நாட்டு தம்பதிக்கு தங்கள் மகனுக்கு விளாடிமிர் புதினின் பெயரை சூட்ட அந்நாட்டு வரி அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சுவீடன் சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்படுவதற்கு முன்னர் பெற்றோர்கள் அந்த பெயரை வரி நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் படி, குழந்தையின் பெற்றோர் ரஷ்ய ஜனாதிபதியின் பெயரை சூட்டுவதற்கான கோரிக்கையை வரி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோது அதனை அவர்கள் நிராகரித்தனர்.
பெயர்கள் புண்படுத்தும் வகையில் இருந்தாலோ அல்லது பெயர் “வைக்கப்படுபவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ” அதனை தடைசெய்ய அதிகாரிகளினால் முடியும்.
எனினும் இந்த விடயத்தில் சம்ந்தப்பட்ட அதிகாரிகள் எந்த வித காரணத்தையும் முன்வைக்காது பெயரை நிராகரித்துள்ளனர்.
இதனை அடுத்து குழந்தைக்கு வேறு ஒரு பெயரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு அல்லா, ஃபோர்டு, மைக்கேல் ஜாக்சன், பில்ஸ்னர், கியூ மற்றும் டோக்கன் உள்ளிட்ட முதல் பெயர்களை வரி நிறுவனம் நிராகரித்தது.