July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அண்டை நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது”: பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி

அண்டை நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 13 ஆவது உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாகியுள்ளது.

இந்த அமைப்பின் 13 ஆவது உச்சி மாநாடு காணொளி ஊடாக நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் அனைத்துத் துறையிலும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளமை தொடர்பிலும் புடின் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது, அண்டை நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என வலியுறுத்துவதாக தெரிவித்துளள்ளார்.