ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் மாநிலத்தை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும், பஞ்ஷிர் மாநிலம் சுதந்திரமாக இருந்தது.
பஞ்ஷிர் மீட்கப்பட்டதுடன் ஆப்கானிஸ்தான் போரின் புயலில் இருந்து முழுமையாக வெளியாகிவிட்டதாக தாலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களுக்கு எதிராக பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் போராடும் தேசிய எதிர்ப்பு முன்னணி, தாலிபான்களின் வெற்றி அறிவிப்பை மறுத்துள்ளது.
தாலிபான்கள் மற்றும் தேசிய எதிர்ப்பு முன்னணி ஆகியவற்றுக்கு இடையில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் போர் தீவிரமடைந்துள்ளது.
“தாலிபான்களின் அறிவிப்பில் உண்மை இல்லை, பஞ்ஷிரை அவர்கள் கைப்பற்றவில்லை. நான் அதனை மறுக்கிறேன்” என்று தேசிய எதிர்ப்பு முன்னணி டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினாலும், தலைநகரில் இருந்து 50 கிலோ மிட்டர் தொலைவில் உள்ள பஞ்ஷிர் மாநிலம் தாலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகின்றது.