January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் முழுமையாக விலகிக்கொண்டதாக அறிவித்தார் ஜோ பைடன்

photo: Twitter/ U.S. Army

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் முழுமையாக விலகிக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் இறுதி விமானம் புறப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் விலகிக்கொண்டதால் 20 வருடங்கள் நீடித்த ஆப்கான் போர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போரிலும் மீட்புப் பணிகளிலும் ஈடுபட்ட அனைத்து அமெரிக்க படையினருக்கும் பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையினர் காபூலில் இருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, தாலிபான் ஆதரவு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு, கொண்டாடியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் கட்டாரில் மேற்கொண்ட டோஹா உடன்படிக்கைக்கு அமைவாக, அமெரிக்க படையினர் ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆப்கானை விட்டு விலகிக்கொண்டுள்ளனர்.

தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை மீட்க முடியுமானதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 2 தசாப்த காலமாகத் தொடர்ந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளும் நிறைவுக்கு வந்ததாக அவர் அறிவித்துள்ளார்.