
பிரித்தானியாவின் பிளைமவுத் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வியாழக்கிழமை மாலை நகரத்தின் கீஹாம் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பெண்கள், 2 ஆண்கள் கொள்ளப்பட்டதுடன் சந்தேகநபர் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களிடையே சிறுவன் ஒருவனும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கடந்த பத்து ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Update: police have confirmed that six people have died in the shooting in #keyham in #plymouth. More people are being treated for their injuries in hospital. Just so unspeakably awful. My condolences and thoughts are with the families.
— Luke Pollard MP (@LukePollard) August 12, 2021
எனினும் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
துப்பாக்கிதாரி 22 வயது நபர் என பொலிஸார் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.