July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தங்கள் கொடியை பறக்கவிட்ட தலிபான்கள்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு முக்கிய எல்லைப்பகுதியில் தலிபான்கள் தங்கள் கொடியை பறக்கவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காந்தஹார் அருகே ஸ்பின் போல்டாக் கிராசிங்கிற்கு மேலே வெள்ளைக் கொடி பறப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட உள்ளன.

அத்தோடு குறித்தப்பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பாக்கிஸ்தானிய எல்லைக் பாதுகாப்பு படையுடன் தலிபான்கள் உரையாடும் விதமான காட்கிகள் சமூக ஊடகங்களில் பரப்பட்டபோதும், ஆப்கானிய அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பர் 11 க்குள் அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவார்கள் என அறிவித்திருந்தார்.

இதன்படி, பெரும்பாலான அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவார்கள் வெளியேரியதையடுத்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் வன்முறைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தாலிபான்களின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆப்கான் படையினர் பல தடவைகள் தஜிகிஸ்தானுக்குள் தப்பியோடியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனிடையே, போராளிகள் நாடு முழுவதும் விரைவான முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான எல்லைகள் உட்பட ஆப்கானிய படைகளிடமிருந்து தொடர்ச்சியான எல்லைகளை கைப்பற்றிவருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நகரமான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மற்றும் மறுபுறம் பாகிஸ்தான் நகரமான சாமன் ஆகியவற்றைப் பிரிக்கும் எல்லை இப்போது தலிபான்கள் கட்டுப்பாடடுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது பரபரப்பான குறுக்குவழியாகும்.

இதன் ஊடாக தலிபான்களுக்கு குறிப்பிடத்தக்க சுங்க வருவாயைக் ஈட்ட முடியும் என சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுக்கின்றன.