July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அகற்றிக்கொள்வது ஆசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அகற்றிக்கொள்ளும் அமெரிக்காவின் தீர்மானம் ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹொங்கொங் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதளவில் பாகிஸ்தானுக்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அமெரிக்க படைகள் நாடு திரும்பிய பின்னர் மத்திய ஆசிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் ஹொங்கொங் போஸ்ட் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் நடத்தும் உரிமைப் போராட்டங்களில், தீவிரவாதிகள் தாக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதாகவும் குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீனர்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க படைகளை நீக்கிக்கொள்வதால் வரும் பாதுகாப்பு சவால்கள் தொடர்பாக சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.