
photo: Facebook/ Samina Baig
உலகின் உயரமான ஏழு சிகரங்களிலும் ஏறிய முதல் பாகிஸ்தான் பெண்ணாக சமினா பேக் சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான ஏழு சிகரங்களையும் தொட்ட முதலாவது முஸ்லிம் பெண்ணாகவும் சமினா இடம்பிடித்துள்ளதாக அரப் நிவ்ஸ் குறிப்பிட்டுள்ளது.
உலகின் இரண்டாவது உயரமான சிகரமான கே2 மலைத் தொடரை சமினா நேற்று ஏறி முடித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதியில் உள்ள கே2 சிகரம், மிக கடினமானதும் ஆபத்தானதுமாக கருதப்படுகிறது.
கே2 மலையை ஏறும் போது பலரும் உயிரிழந்துள்ளதாகவும், தம்மோடு பயணித்த நண்பர் மொஹமட் அலி என்பவரும் உயிரிழந்ததாகவும் சமினா தெரிவித்துள்ளார்.
சமினா பேக் 2013 ஆம் ஆண்டு எரரெஸ்ட் சிகரத்தை ஏறியதற்கான, பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதியுயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஒவ்வொரு உயரமான சிகரங்களையும் ஏறுவதை ஏழு கொடுமுடிகள் (Seven Summits) எனப்படும்.