January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி கிம் ஜொங் உன்

வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதை ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

‘நாட்டு மக்களின் உணவு நிலைமைகள் மோசமடைந்து வருகிறது’ என்று ஜனாதிபதி கிம் ஜொங் உன், சிரேஷ்ட தலைவர்களுடனான கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயத்துறையில், அதன் இலக்குகளை அடையத் தவறியதாக வட கொரிய ஜனாதிபதி கிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஒரு கிலோ கிராம் வாழைப்பழம் 45 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவு, உரம் மற்றும் எரிபொருள் போன்ற விடயங்களில் வட கொரியா சீனாவிலேயே தங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து சீனாவுடனான எல்லைகளையும் வட கொரியா மூடியுள்ளது.

அணுசக்தி திட்டங்கள் காரணமாக வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளும் உணவுத் தட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளன.