January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 30 பேர் பலி!

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு மோதிக்கொண்டுள்ளன.

‘மில்லட் எக்ஸ்பிரஸ்’ ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்ததுடன், ‘சர் சையத் எக்ஸ்பிரஸ்’ ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் இரண்டு ரயில்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் இதில் பயணித்த 30 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.