April 29, 2025 18:03:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளி கோளில் புதிய ஆய்வுப் பணிகளுக்காக இரண்டு விண்கலங்களை அனுப்ப நாசா திட்டம்

வெள்ளி கோளில் புதிய ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க இரண்டு விண்கலங்களை அனுப்புவதற்கு நாசா விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது.

2028 மற்றும் 2030 ஆம் ஆண்டுகளில் இந்த புதிய விண்வெளிப் பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில் நீல்சன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி கோளின் வளிமண்டலம் மற்றும் புவியியல் காரணிகளை ஆராய்வதே இந்த விண்வெளிப் பயணத்தின் நோக்கம் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்த இரண்டு விண்வெளி திட்டங்களுக்கும் தலா 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீனஸ் எனப்படும் வெள்ளி, சூரியனில் இருந்து இரண்டாவது உள்ள, 500 பாகை வரை உயர் வெப்பநிலை கொண்ட கோளாகும்.