July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உருமாறிய கொவிட் வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்தது!

பிரிட்டன், இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொவிட் வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவில் 2020 ஒக்டோபரில் கண்டறியப்பட்ட B.1.617 கொரோனா வகை ‘டெல்டா’ கொரோனா என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிரிட்டனில் 2020 செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ‘அல்பா’ எனவும், தென்னாப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ‘பீட்டா’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரேசிஸிலில் 2020 நவம்பரில் கண்டறியப்பட்ட வகை ‘காமா’ எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ‘எப்சிலான்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த 2021 ஜனவரியில் பிலிப்பைன்ஸில் கண்டறியப்பட்ட கொரோனா வகையை ´தீட்டா´ என்று பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

கிரேக்க எழுத்துக்களே இவ்வாறாக உருமாறிய கொவிட் வகைகளுக்கு பெயராக அறிவிக்கப்பட்டுள்ளது.