January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொவிட் வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு!

வியட்நாமில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய வகை கொவிட் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் வேகமாக இந்த வைரஸ் பரவக் கூடியது என்பதுடன், காற்றிலும் பரவும் தன்மையை கொண்டுள்ளது என்று வியாட்நாம் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் இந்தியாவில் பரவும் வைரஸ் வகையினதும், பிரிட்டனில் பரவும் வைரஸ் வகையினதும் கூட்டுக் கலவையாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் வியட்நாமில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிலரிடம் மாதிரிகளை பெற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போதே புதிய வகை வைரஸ் தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அதிகாரிகள் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

2019 டிசம்பரில் சீனாவில் முதலாவதாக கொவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அந்த வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளிலும் அவதானிக்கப்பட்டது.

இந்நிலையில் கொவிட் வைரஸ் ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்துள்ள நிலையில் அவற்றில் இந்திய வைரஸ், பிரேசில் வைரஸ், இங்கிலாந்து வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் ஆகியன அதிக வீரியம் கொண்டவையாக கருதப்படுகின்றன.