January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேல்- பலஸ்தீன்: ‘ஓரிரு நாட்களில் போர் நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக ஹமாஸ் நம்பிக்கை’

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையே ஓரிரு நாட்களில் போர் நிறுத்தத்தை எதிர்பார்ப்பதாக ஹமாஸ் உயர் அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் இரண்டு வாரங்கள் கடந்தும் அமைதியின்மை தொடர்கின்றது.

இஸ்ரேலிய மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதி உறுதிப்படுத்தப்படும் வரை தாக்குதல்களை தொடரவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் கடந்த 24 மணிநேரங்களில் 100 க்கு அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பலஸ்தீன் மற்றும் காஸா பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய இலக்குகள் மீது ரொக்கட் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மீது 4 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் அதிகமானவற்றை இரும்பு வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நிலை காரணமாக 239 பேர் உயிரிழந்துள்ளனர்.