அஸ்ட்ரா செனிகா மற்றும் பைசர் தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுவதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டில், முதலாவது டோஸ் அஸ்ட்ரா செனிகா பெற்றுக்கொண்ட ஒருவருக்கு இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்குவது குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலாவது டோஸ் அஸ்ட்ரா செனிகா பெற்றுக்கொண்ட ஒருவருக்கு இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்குவது சாத்தியமாகும் என்றும் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், மோசமான பாதிப்புகள் எதுவுமில்லை என்று ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரே தடுப்பூசியில் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு 10 சதவீத வாய்ப்பு காணப்படுவதாகவும், கலப்பு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு 34 சதவீத வாய்ப்பு காணப்படுவதாகவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.