July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹமாஸ் குழுவினரை இலக்கு வைத்து காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்!

பலஸ்தீனிய போராளிகளின் தாக்குதல்கள் தொடர்வதால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

பலஸ்தீனிய போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் நோக்கி ரொக்கெட் குண்டுத் தாக்குதல்களை நடத்தும் நிலையில் இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மே 10 ஆம் திகதி ஆரம்பமான மோதல் தற்போது 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
ஏக்ரே என்ற இடத்தில் ஒரு யூதர், அரேபியர்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாட்யாம் என்ற இடத்தில் பலஸ்தீனியர் ஒருவரை யூதர் குழுவொன்று காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கியது. அதைத்தொடர்ந்தே இருதரப்பு மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த மோதலின் போது, காசா நகரில் அமைந்திருந்த அல் ஷாரூக் கோபுரத்தை இஸ்ரேல் வான்தாக்குதல் மூலம் அழித்தது. இந்த தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் 10 மூத்த படைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். அந்த குண்டுகளை வானிலேயே தடுத்து அழிக்கும் வகையில் இஸ்ரேலிய ‘இரும்பு ரோம்’ என்ற படையினர் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இதேவேளை இஸ்ரேலிய படையினர் காசா நோக்கிய தமது தாக்குதல் நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் காசா பகுதி போர்க்களமாக காணப்படுவதாகவும், பல கட்டிடங்கள் தரை மட்டமாகி இருப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனன.