பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகர் பகுதியில் போதைப் பொருள் குற்றவாளிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ நகரிலுள்ள சேரிப் பகுதியொன்றில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்தப் பகுதிக்குள் நுழைந்த 200 பேர் கொண்ட ரியோ பொலிஸார் போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை தேடியுள்ளனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 25 பேர் வரையிலானோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அந்த நகரில் பொலிஸாரின் நடவடிக்கையின் போது அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்ட முதலாவது சம்பவமாக இது பதிவாகிளுள்ளது.