November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெடோர்னா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்காக அனுமதித்தது உலக சுகாதார ஸ்தாபனம்

அமெரிக்காவின் மெடோர்னா தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் அவசர பயன்பாட்டிற்காக அனுமதித்த ஐந்தாவது தடுப்பூசியாக மெடோர்னா அமைகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியைத் தொடர்ந்து உலக நாடுகள் மெடோர்னா தடுப்பூசியைக் கொள்வனவு செய்யும் வீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ_க்கு எதிரான தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைத்து, நோய்த் தடுப்பை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை இந்தியா இடைநிறுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டாகும் போது, தமக்கு 3 பில்லியன் டோஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறன் இருப்பதாக மெடோர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.