
OLYMPUS DIGITAL CAMERA
photo: wikipedia/MichaelCollins
அமெரிக்காவின் முதலாவது விண்வெளி பயணத்தில் ஈடுபட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான மைக்கல் கொலின்ஸ் 90 வயதில் உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எப்பலோ 11 விண்வெளி திட்டம் மூலம் 1969 ஆம் ஆண்டு சந்திரனுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங், பஸ் ஏல்ட்ரின் உடன் விண்வெளி பயணத்தில் இவர் கலந்துகொண்டார்.
எப்பலோ 11 விண்வெளி பயணத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் பஸ் ஏல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் வைத்திருந்தாலும், மைக்கல் கொலின்ஸ் விண்வெளி ஓடத்தில் இருந்துள்ளார்.
மைக்கல் கொலின்ஸ் இன் மரணத்துடன் அமெரிக்காவின் முதலாவது விண்வெளி பயணம் மேற்கொண்ட பஸ் ஏல்ட்ரின் (வயது 91) மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.