November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசி பாவனையை முழுமையாக நிறுத்தத் தீர்மானித்தது டென்மார்க்

கொரோனா வைரஸுக்கு எதிரான ‘ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசி பாவனையை முழுமையாக நிறுத்துவதற்கு டென்மார்க் தீர்மானித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனகா தடுப்பூசி பயன்பாட்டை முழுமையாக நிறுத்தத் தீர்மானித்த முதலாவது ஐரோப்பிய நாடு டென்மார்க் ஆகும்.

குறித்த தடுப்பூசி பாவனையால் இரத்த உறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாகக் கூறியே, டென்மார்க் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

டென்மார்க்கின் இந்தத் தீர்மானம், நாட்டின் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டில் சில வாரங்கள் வரை பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் உயிரிழப்பு வீதத்தை அதிகரிக்கும் என்றும் ஐரோப்பிய மருந்துகள் முகவரான ‘வாட்ச் டோக்’ தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளைக் காரணம் காட்டி, ஜோன்சன் என்ட் ஜோன்சன் தடுப்பூசி பயன்பாட்டை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இடைநிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.