October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யூரி ககாரியின் 108 நிமிடங்கள்: மனிதன் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று இன்றுடன் 60 ஆண்டுகள்

photo: Twitter/ Russia

சோவியத் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12 ஆம் திகதி சிறிய விண்வெளி குடுவை ஒன்றில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் ஒருமுறை சுற்றிவந்தார்.

108 நிமிடங்களே நீடித்த இந்த விண்வெளிப் பயணமே ரஷ்ய- அமெரிக்க விண்வெளிப் போட்டியில் மிகப் பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது.

1934 இல் பிறந்த ககாரின் சோவியத் விமானப் படை வீரராக சுமார் 166 மணிநேர விமானப் பயண அனுபவத்தை நிறைவு செய்திருந்த சந்தர்ப்பத்தில் அவரது 27 ஆவது வயதில் இந்த சாதனைப் பயணத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

5 அடி 2 அங்குலம் உயரமான யூரி ககாரின், 5 அடி 7 அங்குலமே உயரமான குடுவையில் அமர்ந்த படி பூமியின் எல்லையை விட்டுப் பறந்து விண்வெளியை அடைந்த செய்தி அப்போது விண்வெளி ஆய்வுப் போட்டியில் சோவியத் அரசுக்கும் மிகப் பெரும் பிரசாரமாக அமைந்தது.

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் முதல் மனிதனாக கால் பதிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னதாக ககாரின் 1968 ஆம் ஆண்டில் தனது 34 வயதில் விமானப் பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

யூரி ககாரியின் விண்வெளி பயணத்தை நினைவுகூர்ந்து, உலக நாடுகளும் விண்வெளி ஆய்வு மையங்களும் இன்றைய நாளை சர்வதேச விண்வெளிப் பயண தினமாகக் கொண்டாடுகின்றன.