July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மற்றுமொரு பெண் பலி

(Photo:Myanmar Now/Twitter)

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இடம்பெற்று வந்த போராட்டத்தின் போது பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மியன்மார் மத்திய நகரமான மோன்வியாவில் பாரிய போராட்டமொன்று இடம்பெற்று வந்த நிலையில் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் பெண்ணொருவர் பலியாகியதுடன் பலர் காணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக மியன்மாரின் பிரதான நகரங்களில் பொலிஸார் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் ஊடகவியலாளர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் துப்பாக்கிச்சூடு தொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி மியன்மாரில் இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.