
மியன்மார் இராணுவத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை தடுக்கும் நோக்கில் சர்வதேச கொள்கைகளுக்கு அமைவாக மியன்மார் இராணுவத்தின் பேஸ்புக் கணக்கை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்றைய தினம் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில் அங்கு நிலவும் வன்முறைகள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள பேஸ்புக் நிறுவனம், மியன்மார் இராணுவத்தின் பேஸ்புக் கணக்கை முழுமையாக முடக்கியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.