January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் பூமிக்கு புகைப்படங்களை அனுப்பியது

Photo: Twitter/ NASA

நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.

ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தாக்கில் ரோவர் தரையிறக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபட்ட ரோவர் வெள்ளிக்கிழமை செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியதுடன், அங்கிருந்து இரண்டு படங்களையும் பூமிக்கு அனுப்பி வைத்தது.

இதன்போது கலிபோர்னியாவில் நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பி அதனை கொண்டாடினர்.

இந்த ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய்க் கிரகத்தில் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அங்கு முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.