July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மியன்மாரில் இராணுவப் புரட்சிக்கு எதிராக தடைகளை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

(Photo: Twitter /@phupwintth)

மியான்மாரில் ஆங் சாங் சூ சி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டு இராணுவத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய மியன்மாரின் தலைநகர் யாங்கூனில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக “இராணுவ சர்வாதிகாரம் தோல்வியடைக, ஜனநாயகம் வெற்றிபெறுக” போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்தோடு இணையத்தடைகள், சமூக ஊடகங்களின் தடைகளையும் மீறி இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் கைது செய்யப்பட்டுள்ள தலைவர் ஆங் சான் சூ சியை விடுதலை செய்யுமாறும் கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பல கட்டுப்பாடுகளையும் மீறி இராணுவத்திற்கு எதிராக மக்கள் சிவப்பு நிற பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மியன்மாரில் ஆங் சான் சூசியின் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதார ஆலோசகர் சீன் டனல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது “நான் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்படுகின்றேன், எனக்கு எதிராக ஏதோ ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கவுள்ளனர்.

ஆனால் என்னவென்பது எனக்கு தெரியவில்லை, நான்குற்றவாளியில்லை” எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மியன்மாரில் கைதுசெய்யப்பட்டுள்ள முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.