இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாட்டிற்கு கஞ்சா ஏற்றுமதியே சிறந்த தீர்வாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய மருத்துவச் செடியாக கஞ்சா அறியப்படுவதாகவும், இது மிகவும் ஆபத்தான போதைப்பொருள் என்ற ஒரு போலியான விம்பம் நாட்டில் உருவாக்கியுள்ளதாகவும் டயனா கமகே கூறியுள்ளார்.
ஆனால் கஞ்சா ஆபத்தான போதைப்பொருள் அல்ல என கடந்த வருடம் டிசம்பர் மாதம் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி இலங்கை கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளதாகவும், கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள 45 நாடுகளில் கஞ்சா வளர்ப்பு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய ஏற்றுமதி பொருளாக கஞ்சா இருப்பதாக டயனா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கஞ்சா ஏற்றுமதி குறித்த தனது முன்மொழிவை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ள அவர், ஒரு சிலர் இதனை தவறாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.