
ரஷ்யாவில் இருந்து மேலும் 65 ஆயிரம் ‘ஸ்புட்னிக்-வி’ கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.
விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை இவை இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இவற்றில் 15 ஆயிரம் தடுப்பூசிகள் இரண்டாம் டோஸாக செலுத்தவென ஒதுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனைய 50 ஆயிரம் தடுப்பூசிகளும் கண்டி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் முதலாம் கட்டமாக ரஷ்யாவில் இருந்து 15,000 தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதுடன், அவை கொத்தட்டுவ பகுதி மக்களுக்கு ஏற்றப்பட்டன.
அவர்களுக்கு சில வாரங்களில் இரண்டாவது டோஸ் வழங்க வேண்டியுள்ளதால் இன்று கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளில் ஒரு தொகுதியை அதற்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.