January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் எளிமையாக நடைபெற்ற தீபாவளி சிறப்பு வழிபாடுகள்

இலங்கையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இம்முறை கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றன.
வழமையில் பெருமளவு பக்தர்கள் கூடும் கோவில்களில் இம்முறை குறைந்தளவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய ஆலயங்களில் பிரதான பாதைகள் மூடப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

“நரகாசுரனைப் போல் கொரோனாவும் ஒழிய வேண்டும்”

விரைவில் கொரோனா அச்சம் நீங்கி மக்கள் நிம்மதி பெற வேண்டும் என்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நரகாசுரன் ஒழிந்ததைப் போல் கொரோனாவும் விரைவில் ஒழிய வேண்டும் என்று பக்தர்கள் தீபாவளித் தினத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதாக ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் பிரதான குருக்கள் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
பெரும்பாலும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே மிக எளிமையாக இம்முறை தீபாவளியை கொண்டாடினர்.