உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நிலையில், இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தீபாவளி வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்கு தீபாவளி போன்ற கலாசார விழாக்கள் பெரிதும் உதவுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Deepavali festival is a renowned cultural celebration where the devotees extend wishes of enlightenment and share greetings with love and compassion.
I wish all those who celebrate this festival of enlightenment would attain the inner peace they expect. pic.twitter.com/f0jQw0n63F
— Gotabaya Rajapaksa (@GotabayaR) November 14, 2020
தீபத் திருநாள் பண்டிகை அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி, ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழாவாகும்.
தீபத் திருநாளில் உலக அமைதிக்காக இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வர் என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/SrilankaPMO/status/1327431895609556993?s=20
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் தீபாவளியைக் கொண்டாடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
“கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும், எம் மக்கள் அனைவருக்கும் எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாகவும் இத்தீபாவளித் திருநாள் அமைய வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.