January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 40 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

File Photo: Facebook/slbfeOfficial

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியிருந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்விற்கான வலைப்பின்னலை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களினதும் நலன்களை மேம்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவலையடுத்து, அவர்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்களின் தகவல்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் விமானங்கள் மூலம் உலர் உணவு பொதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளில், கொரோனா வைரஸ் நெருக்கடியால் வேலைவாய்ப்பினை இழந்தவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.